இதழ் - 130 இதழ் - ௧௩௦
நாள் : 20- 10 - 2024 நாள் : ௨௦ - ௧௦ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 130
” உலக்கைமேல் காக்கை ”
விளக்கம்
உலக்கையை உயர்த்திக் குத்துகின்ற போது அதன் மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின் கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
'உலக்கைமேல் காக்கை' என்பார்.
அதாவது, அளவுக்கு அதிகமான பெருஞ்செல்வத்தை ஈட்ட நினைப்பவர்கள் தன்னை விட செல்வத்தில் உயர்ந்தவர்களை நாடிச் செல்வம் ஈட்ட நினைப்பர். இருப்பினும் அதில் அவர்களால் நிலைத்து நிற்க இயலாது. இவர்களின் நிலைப்பாடு உரலில் குத்தும் உலக்கையின் மேல் காக்கை நிற்பதற்குச் சமமாகும் என்பதையே 'உலக்கைமேல் காக்கை' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment