இதழ் - 145 இதழ் - ௧௪௫
நாள் : 16 - 02 - 2025 நாள் : ௧௬ - ௦௨ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 145
“ ஊரறியா மூரியோ இல் ”
விளக்கம்
ஊரில் யாருக்கும் அடங்காமல் திரியும் முரடர்களை அனைவரும் அறிவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
“ ஊரறியா மூரியோ இல் ”
உண்மை விளக்கம்
கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.
இங்கு மூரி என்பது ஊரில் கட்டுக்கு அடங்காமல் கொளுத்து திரியும் எருதைக் குறிக்கிறது.
ஓர் ஊரில் திறம் படைத்த காளையை அனைவரும் அறிவர் அதுபோலவே புத்திக் கூர்மையுடைய திறம் படைத்த இளைஞர்களையும் ஊரார் அறிவர். அத்தகையோருள் சில புத்திக்கூர்மையற்றவர்கள் தன்னிடமுள்ள இருண்ட அறிவினைச் சிறந்ததென்று எண்ணிக்கொண்டு யாரையும் மதிக்காமல் மூரி போன்று அலைவர். அத்தகையோரையும் ஊரார் அறிவர் என்பதைக் குறிக்கவே 'ஊரறியா மூரியோ இல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment