இதழ் - 161 இதழ் - ௧௬௧
நாள் : 15 - 06 - 2025 நாள் : ௧௫ - ௦௬ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 161
'எருத்திடை வைக்கோல் தினல்'
விளக்கம்
இரண்டு எருதுகளுக்கிடையே வைக்கப்பட்டிருக்கும் வைக்கோலைத் திண்பதற்கு இரு மாடுகளும் சண்டையிட்டால் முடிவில் வைக்கோலை இரண்டு மாடுகளும் திண்ண முடியாமல் கெடும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்
ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும் ஆகாது தீதாம்; அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.
தீய எண்ணம் கொண்ட ஒருவன் வலிமை கொண்ட இரண்டு மன்னர்களிடம் ஆதாயம் வேண்டி, இருவருக்குள்ளும் கலகம் ஏற்படுத்த முனைகிறான். முடிவில் அது முடியாமல் போகவே அவ்வினை தனக்கே ஆபத்தாக முடிகிறது.
இச்செயலானது இரண்டு வலிமை கொண்ட எருதுகளுக்கிடையே வைக்கப்பட்டிருக்கும் வைக்கோலைப் போன்று அவனின் நிலை ஆகிவிடும் என்பதைக் குறிக்கவே 'எருத்திடை வைக்கோல் தினல்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment