பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் -

இதழ் - 147                                                                                இதழ் - ௧
நாள் : 02 - 03 - 2025                                                            நாள் :  -  - ௨௦௨



காக்கைபாடினியார் (நச்செள்ளையார்)
 
     காக்கைபாடினியார் கடைச்சங்க காலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் பன்னிரண்டு உள்ளன. நற்செள்ளை என்ற இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயர் அமைந்துவிட்ட  சங்காலப் புலவர்களுள் நற்செள்ளையாரும் ஒருவர். 

இவரது பாடல்கள் மூலம்  நாம் அறிந்து கொள்பவை,

  • காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர். 
  • இறந்து போன முன்னோர்க்காக,  காக்கைக்குச் சோறளிக்கும் வழக்கம் இருந்தது. (இந்த நம்பிக்கை தமிழ் மக்களிடம் சங்க காலம் தொட்டு இன்றுவரை நிலவுகிறது.)
  • போரில் புறமுதுகிடல் மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. புறமுதுகிட்டவனை தாயும் வேண்டாள். வீரமரணம் போற்றப்பட்டது.
  • துணங்கைக் கூத்து ஆடல் வழக்கத்தில் இருந்தது. மன்னனும் மக்களுடன் கைகோர்த்து கூத்தில் பங்குகொண்டான்.
  • வழிச்சாலைகளில் இனிய பழமரங்களை வழிப்போக்கர்களின் பொருட்டு வைத்து வளர்ப்பது வழக்கமாக இருந்தது.

     இவரது பாடல்களைப் படிப்பதன் மூலம் தமிழின் சுவையினையும் பல செய்திகளையும் அறிந்து கொள்ள முடியும்.


 சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment