இதழ் - 113 இதழ் - ௧௧௩
நாள் : 23 - 06 - 2024 நாள் : ௨௩ - 0௬ - ௨௦௨௪
பழமொழி – 113
"ஆறு கெட நாணல் விடு ஊரு கெட நூல விடு "
விளக்கம்
ஆறு கெட்டுப்போக நாணல் விடவேண்டும் என்றும் ஊர் கெட்டுப்போக நூல் விடவேண்டும் என்றும் தலைகீழாக நாம் இப்பழமொழிக்குப் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
"ஆறு கெட நாணல் விடு ஊரு கெட நூல விடு "
உண்மை விளக்கம்
இங்கு நாணல் என்பது ஒருவகை புல்தாவரம் ஆகும். ஆற்றின் கரைப்பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கும் தாவரவகை ஆகும். நூல் என்பது நாம் படிக்கும் புத்தகத்தைக் குறிக்கிறது.
இப்பழமொழியில் நாணல் தாவரம் இல்லாத ஆற்றுப்புறம் மண் அரிப்பால் கெட்டுப் போகும் என்றும், புத்தகம் படிக்காத கல்வி அறிவில்லா ஊார்அறிவின்மையால் கெட்டுப்போகும் என்ற சூழலைக் குறிக்கவே “ஆறு கெட நாணல் விடு ஊரு கெட நூல விடு“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment