இதழ் - 87 இதழ் - ௮௭
நாள் : 24-12-2023 நாள் : ௨௪-௧௨-௨௦௨௩
பாணர்
பாணர் என்றும், வாணரென்றும் பெயர்பெற்ற குடியினர் பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். முனையர் பெயரால் முனைப்பாடி எழுந்தாற் போன்று, பாணர் பெயரால் பெரும் பாணப்பாடி உண்டாயிற்று. அதன் தலைநகரம் நிவாநதிக் கரையிலுள்ள திருவல்லம் என்னும் தீக்காலி வல்லம் ஆகும். வாணபுரம் என்ற மறுபெயரும் அதற்குண்டு. அந்நகரின் அருகே பாண மன்னர் வெட்டிய ஏரியும், அதைச் சார்ந்த ஊரும் வாணசமுத்திரம் என்று பெயர் பெற்றன. இன்னும், வடஆர்க்காட்டில் சோழிங்கருக்கு அருகிலுள்ள பாணவரம் என்ற ஊரும் பாணர் குடியை நினைவூட்டுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment