இதழ் - 21 இதழ் - ௨௧
நாள் : 18-09-2022 நாள் : ௧௮-௦௯- ௨௦௨௨
பழமொழி – 21
“கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆவான் “
ஒருவன் தான் கண்ட அனைத்தையும் கற்றுத்தேர்ந்தான் எனில் பண்டிதன் ஆகிவிடுவான் என்று நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
“கண்டு அதனைக் கற்றால் பண்டிதன் ஆவான்“
ஒருவன் தான் எதைக் கற்க வேண்டும் என்பதைத் தீர்மானித்த பிறகே அதைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றால் மட்டுமே அவன் அத்துறையில் சாதனைகள் பல செய்ய முடியும். இதனையே கண்டு அதனைக் கற்றால் பண்டிதன் ஆவான் என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment