இதழ் - 74 இதழ் - ௭௪
நாள் : 24-09-2023 நாள் : ௨௪-0௯-௨௦௨௩
பாளையம்
படைவீரர்கள் வசிப்பதற்காக அரசனால் உருவாக்கப்பட்ட ஊர் பாளையம் எனப்பட்டது. தமிழகம் முழுமையும் பல பாளையங்கள் காணப்படுகின்றன. சிறப்பாகக் கொங்கு நாடே பாளையத்திற்குப் பேர் பெற்ற நாடாகும். பாளையத்தின் தலைவன் பாளையக்காரன் என்று அழைக்கப்படுவான். அவ்வாறே ஊர் பெயரும் அமைந்துவிட்டது. குறிப்பாக மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், உத்தமபாளையம், உடையார் பாளையம், இராஜபாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்க பாளையம், நாயக்கன் பாளையம், கஸ்தூரிநாயக்கன் பாளையம், தோலாம் பாளையம், கவுண்டம்பாளையம், சாமிசெட்டிப்பாளையம், ஜங்கமநாயக்கன் பாளையம், தீதிப்பாளையம், குரும்பப்பாளையம், கள்ளிப்பாளையம், வாகாரயம்பாளையம், மணியகாரம்பாளையம், கோவில்பாளையம், பாப்ப நாயக்கன்பாளையம், செட்டிபாளையம் முதலிய பாளையங்கள் தமிழ் நாட்டில் உண்டு. திருநெல்வேலிக்கருகே பாளையங்கோட்டை என்னும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கேயுள்ள பாளையம் மேலப்பாளையம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு பெரும்பாலான பாளையங்கள் தமிழக ஊர்ப்பெயர்களில் காணமுடிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment