இதழ் - 51 இதழ் - ௫௧
நாள் : 16-04-2023 நாள் : ௧௬-0௪-௨௦௨௩பழமொழி – 51
”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்“
விளக்கம்
இந்தப் பழமொழியில் ஒரு குழந்தைக்குத் தாய் ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும் எனத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்“
உண்மை விளக்கம்
இங்கு மாதா (தாய்), ஒரு குழந்தைக்குச் சோறு ஊட்ட முடியவில்லை என்றால் அக்குழந்தைக்குச் சோற்றில் சிறிது மாங்காய் (மாங்காய் ஊறுகாய்) சேர்த்து ஊட்ட வேண்டும். அவ்வாறு ஊட்டி வந்தால், அம்மாங்காய் ஊறுகாய் வயிற்றில் செரிமான சக்தியை ஊக்குவித்து குழந்தைக்கு பசியைத் தூண்டும். பசி குழந்தைக்கு வந்துவிட்டால் தானகவே குழந்தை சோற்றை உண்ணும் என்பதையே ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது. (இப்பழமொழியில் மாங்காயின் சிறப்பையும் அறியமுடிகிறது)
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment