இதழ் - 142 இதழ் - ௧௪௨
நாள் : 19 - 01 - 2025 நாள் : ௧௯ - ௦௧ - ௨௦௨௫
தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பொதிய மலைக்கு அண்மையிலிருந்த நாட்டை ஆய் என்ற குலத்தார் நெடுங்காலம் ஆண்டு வந்தனர். அக்குலத்தில் வந்த ஆய் அண்டிரன் என்னும் வள்ளல், புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது.
"தென்திசை ஆஅய் குடியின் றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே”
என்ற புறனாநூறு 99ஆம் பாடலில் சங்கப்புலவர் மோசியார் ஆய்குடியின் பெருமையைப் புனைந்துரைத்தார். இவ்வூர் இன்றும் பொதியமலைச் சாரலில் உள்ளது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment