பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் : 95                                                                                                இதழ் : 
நாள்   : 18-02-2024                                                                              நாள் :  -0-௨௦௨௪ 

 
பண்புப்பெயர்ப் புணர்ச்சி

பண்புப்பெயர்ப் புணர்ச்சி
  • ஒரு பெயரின் நிறம், அளவு, சுவை, குணம், வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப் பெயர்கள் ஆகும்.
  • செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல்வனவும் இவற்றிற்குரிய எதிர்ச் சொற்களும் இவை போன்ற பிறவும் மையீற்றுப் பண்புப் பெயர்கள் எனப்படும்.

             “ செம்மை சிறுமை  சேய்மை தீமை
              வெம்மை புதுமை மென்மை மேன்மை
               திண்மை உண்மை, நுண்மை இவற்றெதிர்
               இன்னமும் பண்பின் பகாநிலைப் பதமே ” 
                                  - நன்னூல். நூற்பா. எண். 135

     மேற்காட்டிய “மை“யீற்றுப் பண்புப்பெயர்கள் நிலைமொழியாக நின்று வருமொழியோடு புணரும்போது அடையும் மாற்றங்களைக் பின்வருமாறு காணலாம் .
சான்று
  • நல்லன்             =   நன்மை + அன்
  • வெண்பட்டு          =   வெண்மை + பட்டு
  • செம்மை + மொழி  =   செம் + மொழி    =   செம்மொழி
     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment