இதழ் - 188 இதழ் - ௧௮௮
நாள் : 11-01-2026 நாள் : ௧௧-0௧-௨௦௨௬
இளங்கோவடிகள்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இளங்கோ என்ற சமண சமயத்தை சேர்ந்த துறவி எழுதியுள்ளார். இவரை அடிகள் என்ற அடை கொடுத்து இளங்கோவடிகள் என்று அழைக்கின்றோம்.
சிலப்பதிகாரம் காப்பியங்களில் முதலில் தோன்றியது என அறியப்படுகிறது. இது முத்தமிழான இயல், இசை, நாடகம் கலந்து எழுதப்பட்ட சுவை மிக்க காப்பியம் இக்காப்பியம் வாயிலாகத் தமிழர்களின் வாழ்வியல் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழின் செழுமையையும் தொன்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ கண்ணகி, மாதவி அழகு, மாதவி அணிந்துள்ள அணிகலன்கள், ஆடல்,பாடல், நாட்டு வளம், நகர்வளம், காதல் மொழி, பிரிதல் மொழி, மடல் எழுதுவது இவற்றை தமிழ் மூலம் சுவைக்கச் செய்கிறார்.
ஒரு மொழியின் சிறப்பு என்பது அம்மொழியைப் பேசும் மக்கள் குழுவின் வாழ்வியலை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறது. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் போற்றப்பட்டது எனில் இதன் சிறப்பை எப்படிக் கூறுவது.
(வரும் கிழமையும் இளங்கோ வருவார்...)
முனைவர் சாந்தி மகாலிங்கசிவம்
தமிழார்வலர்
கோயம்புத்தூர்

No comments:
Post a Comment