பக்கங்கள்

தமிழ்ச் சொல் தெளிவோம்

 

இதழ் - 5                                                                       இதழ் - ரு  
நாள் : 29-5-2022                                                         நாள் : உ௯-ரு-௨௦உஉ
 
 

 அன்பான தமிழமுத வாசகர்களுக்கு,


     “தமிழ்ச்சொல் தெளிவோம்” என்ற தலைப்பின்கீழ் வரும் இந்தப் பகுதியில் இருந்து நாம் அன்றாடம் பேசும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எவையெவை என்பதனை அறிந்திருப்போம். 
 
     சில வேளைகளில் இது பிறமொழிச் சொல்லா அல்லது தமிழ்ச் சொல்லா என்ற ஐயம் கூட நம்மிடம் தோன்றியிருக்கும். ஆனால் இப்போது அந்த ஐயம் தமிழமுதம் மின்னிதழ் வாயிலாக ஓரளவு தெளிந்து வருகிறது என நம்புகிறோம். 
 
     முடிந்தவரை நம்தாய்த் தமிழ்மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம் என்று உறுதி ஏற்போம். 
 
தமிழமுதத்தின் குறிக்கோளும் இதுவே.


  • பஞ்சாங்கம் கணக்கிடுவது ஒரு கலையாகும்.

  • ஐந்திரம்  கணக்கிடுவது ஒரு கலையாகும்.

  • பண்டிகை மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

  • திருவிழா மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

  • நற்பழக்கங்களை வாடிக்கையாக்கிக் கொள்ளல் நல்லது.

  • நற்பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ளல் நல்லது.

  • கோபத்தைத் தவிர்த்தல் நல்லது.

  • சினத்தைத் தவிர்த்தல் நல்லது.

  • எச்செயலையும் சிந்தித்து ஆரம்பிக்க வேண்டும்.

  • எச்செயலையும்  சிந்தித்துத் தொடங்க வேண்டும்.

 

( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.

 

 

No comments:

Post a Comment