பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 28                                                            இதழ் - ௨௮
நாள் : 05-11-2022                                               நாள் : 0 - ௧௧ - ௨௦௨௨

      
 
சொல் இலக்கணம்
 
      எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். பொருளை அறிவதற்குக் கருவியாய் இருப்பது சொல்.

  • சொல் இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும்.
  • மூவகை இடங்களிலும் வரும்.
  • உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும்.
  • வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளை அறிவிக்கும்.
  • சொல்லை வடமொழியில் பதம் என்பர். 
  • இப்பதம்,  இருவகைப்படும்.
    • பகுபதம் 
    • பகாபதம்
  • பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரிக்கப்படும் சொல் அல்லது பதம் பகுபதம் ஆகும். 
  • பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரிக்க முடியாதது பகாபதம் ஆகும்.

சான்று
  • பகுபதம்    -   பார்த்தான் = பார் + த் + த் + ஆன்
  • பகாபதம்   -   மண்

பகுபதம், பகாபதம் ஆகிய சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
 
சொற்களின் இலக்கண வகை
  • பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
 
சொற்களின் இலக்கிய வகைகள்
  • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைப்படும்.
      இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை
       என இரண் டாகும் இடைஉரி அடுத்து
       நான்கு மாம், திசை வடசொல், அணு காவழி
                                         ( நன்னூல் நூற்பா எண். 270 )


( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment