இதழ் - 168 இதழ் - ௧௬௮
நாள் : 03 - 08 - 2025 நாள் : ௦௩ - ௦௮ - ௨௦௨௫
இலக்கணம் கற்போம்
பொருள் இலக்கணம்
முதற்பொருள்
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் இவை ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.
நிலம்
- ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு :
- குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
- முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
- மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
- நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
- பாலை - சுரமும் சுரம் சார்ந்த இடமும்
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment