இதழ் - 94 இதழ் - ௯௪
நாள் : 11-02-2024 நாள் : ௧௧-0௨-௨௦௨௪
முடி மன்னர் குடி - சோழர்
முடியுடை மன்னராய்ப் பழந்தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேரர், சோழர், பாண்டியர் ஆவர். இம்மூவரசுகளும் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். அவற்றுள் சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தது. செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள் சிறந்தனவாகும்.
செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள செம்பிய நல்லூர், பாண்டி நாட்டிலுள்ள செம்பியனேந்தல் முதலிய ஊர்கள் சோழர்களின் செம்பியன் பெயரைத் தாங்கி நிற்கின்றன. தஞ்சை நாட்டிலுள்ள செம்பங்குடி என்பது செம்பியன் குடியாக இருந்தது. இனி, தென் ஆர்க்காட்டு வளவனூர், வட ஆர்க்காட்டு வளையாத்தூர் என்னும் வளவன் ஊற்றூர், தஞ்சை நாட்டிலுள்ள வளவநல்லூர், செங்கற்பட்டிலுள்ள வளவன் தாங்கல் முதலிய ஊர்களின் பெயரில் வளவன் என்னும் சொல் காணப்படுகின்றது. இன்னும், தஞ்சை நாட்டில் சென்னி வனம், சென்னிய நல்லூர், சென்னிய விடுதி என்னும் ஊர்கள் உள்ளன. இவையாவும் சோழர்களின் சிறப்புப் பெயா்களிலிருந்து தோன்றியதே.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment