இதழ் - 58 இதழ் - ௫௮
நாள் : 04-06-2023 நாள் : 0௪-0௬-௨௦௨௩ எச்சம்
ஒரு சொல்லில் பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்பது எச்சமாகும். அதாவது முக்காலமும் செயலையும் குறிப்பிட்டு திணை, பால், எண், இடம் இவை தோன்றாது வருவது எச்சமாகும்.
'பிறிதோர் சொல் பற்றியல்லது நிற்றல் ஆற்றா வினைச்சொல் எச்சமாம்' என்பார் உரையாசிரியர் சேனாவரையர்.
சான்று
படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
வகைகள்
எச்சம் இரு வகைப்படும்- பெயரெச்சம்
- வினையெச்சம்
பெயரெச்சம்
எச்ச வினை பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் ஆகும். செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்ப்பாட்டு முறையில் முறையே முக்காலத்தையும் உணர்த்தும்.
சான்று
- படித்த மாணவன் - இறந்தகாலப் பெயரெச்சம்
- ஓடுகின்ற குதிரை - நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் - எதிர்காலப் பெயரெச்சம்
செய்த செய்கின்ற செய்யும் என்பாட்டிற்
காலமும் செயலுந் தோன்றிப் பாலொடு
செய்வது ஆதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச்சமே
காலமும் செயலுந் தோன்றிப் பாலொடு
செய்வது ஆதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச்சமே
- நன்னூல், நூற்பா எண். 340
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment