இதழ் - 105 இதழ் - ௧0௫
நாள் : 28-04-2024 நாள் : ௨௮-0௪-௨௦௨௪
பழமொழி – 105
“ சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது ”
விளக்கம்
சான் பிள்ளை பெற்றெடுத்தாலும் மருவச்சிக்கு கூலி குறைத்துக் கொடுக்க முடியாது என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
“ சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது ”
உண்மை விளக்கம்
இங்கு சாப்பிள்ளை என்பது சான் – அரை முழம் என்று பண்டைக்கால கணக்காக எடுத்துக்கொள்ளக் கூடாது. சாப்பிள்ளை – என்றால் இறந்த குழந்தை எனப் பொருள் கொள்ள வேண்டும்.
பிள்ளைப்பேற்றிற்கு மருத்துவமனையில் அனுமதித்த ஒரு பெண்ணிற்கு குழந்தை இறந்தே பிறந்தாலும் மருத்துவருக்கான கூலியை கொடுத்தே தீர வேண்டும். குழந்தை இறந்து பிறந்ததால் கூலி இல்லை எனக் கூற முடியாது என்பதை உணர்த்தவே “சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment