பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 65                                                                                          இதழ் -
நாள் : 23-07-2023                                                                           நாள் : ௨௩-0-௨௦௨௩
 
 
     
 
உம்மை இடைச்சொல்

உம்மை இடைச்சொல்
  • உம் என்னும் இடைச்சொல் எட்டுப்பொருள்களில் வரும். 
  • எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்பனவாகும். 
  • இதில், உம்மை என்பதில் உள்ள ‘ஐ’ சாரியை ஆகும்.
 
         “எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
         தெரிநிலை யாக்கமோடு உம்மை யெட்டே.” 
                                         ( நன்னூல், நூற்பா எண். 425 )

சான்று

  • குரங்கும் ஏற முடியாத மரம்          -    உம் உயர்வு சிறப்பும்மை
  • நாயும் தின்னாத உணவு             -    இழிவு சிறப்பும்மை
  • பத்தாயினும் எட்டாயினும் கொடு    -    ஐயவும்மை
  • அவள் வந்தாலும் வருவாள்         -    எதிர்மறை உம்மை.
          (பெரும்பாலும் வரமாட்டாள் என்ற எதிர்மறைப் பொருளை உணர்த்தும்.)
 
  • நீயும் போ, நானும் வருகிறேன்    -    நீயும் என்பதில் உள்ள உம்மை எதிரே உள்ள நானும் என்பதைத் தழுவி நிற்கிறது. ஆதலால் இஃது எதிரது தழுவிய எச்ச உம்மை.
  • நானும் என்பதிலுள்ள உம்மை முன்னே உள்ள அஃதாவது இறந்ததாக உள்ள நீயும் என்பதைத் தழுவி நிற்பதால், இஃது இறந்தது தழுவிய எச்ச உம்மை.
 
சான்று
  • இருகண்களும் சிவந்தன              -    முற்றும்மை
  • பாம்பும் அன்று கயிறும் அன்று        -    தெரிநிலை உம்மை
  • பால் மருந்தும் ஆயிற்று               -     ஆக்கவும்மை
  • அண்ணனும் தம்பியும் வந்தார்கள்    -     எண்ணும்மை 
          (எண்ணப்படுவதால் இஃது எண்ணும்மை ஆகும்)
 
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment