இதழ் - 135 இதழ் - ௧௩௫
நாள் : 24- 11 - 2024 நாள் : ௨௪ - ௧௧ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 135
“ அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ ”
விளக்கம்
ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு காய்ச்சல் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த காய்ச்சல் போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். அதைக்கண்ட அவன் சூடான அரிவாளின் காய்ச்சளுக்கு மாற்று இதுவென உணர்ந்தான் என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.
” அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ ”
உண்மை விளக்கம்
இந்தப் பழமொழி ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு காய்ச்சல் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த காய்ச்சல் போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம்.
அதுபோலவே வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு காய்ச்சல் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம். இத்தகைய முட்டாளின் மூடத்தனத்தைக் குறிக்கவே “அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment