பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 98                                                                                              இதழ் - 
நாள் : 10-03-2024                                                                               நாள் : 0-0-௨௦௨


பழமொழி – 98

” இன்னாதே பேஎயோ டானும் பிரிவு ”
 
விளக்கம்

    ஒருவரோடு நட்புடன் பழகிவிட்டால் அது பேயாகவே இருந்தாலும் அதைவிட்டு பிரிய முடியாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
        கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
        தாஅய இழியும் மலைநாட! 'இன்னாதே
        பேஎயோ டானும் பிரிவு'.

    ஒருவருடன் நட்பு கொள்வதற்கு முன்னர், அவர் தகுதி உடையவரா என்பதை ஆராய்ந்து அறிந்து நட்பு கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் எதையும் அறிந்து கொள்ளாமல் நட்பு கொண்டு விட்டால் பின்னர் அந்நபரிடமிருந்து பிரிவது துன்பத்தையே தரும். மேலும் அது பேயாகவே இருந்தாலும் நட்புகொண்டபின் பிரிவது துன்பத்தையே தரும் என்பதையே 'இன்னாதே பேஎயோ டானும் பிரிவு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment