பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 29                                                            இதழ் -
நாள் : 13-11-2022                                               நாள் : - ௧௧ - ௨௦௨௨

      
 
சொல் இலக்கணம் கற்போம்
 
இயற்சொல்
முதலில் சொற்களின் வகைகள் பற்றிப் பார்ப்போம்.
 
"இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர் வினை
 என இரண்டாகும் இடை உரி அடுத்து
 நான்கும் ஆம் திசை வட சொல் அணுகாவழி "
                                     - நன்னூல்  - 270


இயற்சொல்
  • இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்கும் சொல்லாக இருக்கும்.
  • வடிவமோ பொருளோ திரியாது விளங்கும்.
  • கற்றவர்கள், கல்லாதவர்கள் அனைவராலும் எளிதில் பொருள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

“செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
 தம்பொருள் விளக்கும் தன்னே இயற்சொல்”
                                     -  நன்னூல்-271


இயற்சொல்லை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

பெயர் இயற்சொல்  
எ.கா: மரம், மண்

வினை இயற்சொல்
எ.கா: பார்த்தான், வந்தது

இடை இயற்சொல்
எ.கா: மற்று, ஒன்று

உரி இயற்சொல்
எ.கா: உறு, புகழ்

தொடர்ந்து கற்போம் . . .

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment