பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ்–3                                                                                          இதழ் - ௩
நாள் : 15-5-2022                                                                            நாள் :
௧௫-ரு-௨உஉ



 

1.    கோடையில் மழை பெய்வது சந்தோஷமான நிகழ்வு ஆகும்.

     கோடையில் மழை பெய்வது மகிழ்ச்சியான நிகழ்வு ஆகும்.

2.    இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியது.

     இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது

 

3.    கற்கள் இல்லாத இடத்தில் உலகமே வியந்து போற்றும் 
     தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனை நினைத்தால் 
     ஆச்சரியமாக இருக்கிறது.
 
     கற்கள் இல்லாத இடத்தில் உலகமே வியந்து போற்றும் 
     தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனை நினைத்தால் 
     வியப்பாக இருக்கிறது.
 

4.   திங்களின் அர்த்தம் மாதம், நிலவு, கிழமையில் ஒரு நாள் என்பனவாகும்.

     திங்களின் பொருள் மாதம், நிலவு, கிழமையில் ஒரு நாள் என்பனவாகும்.
 

5.   தாய், தந்தை, உறவினர்கள் என யாருமற்றவர்களை அனாதை 
     என்று சொல்வார்கள்.
 
     தாய், தந்தை, உறவினர்கள் என யாருமற்றவர்களை திக்கற்றவர் 
     என்று சொல்வார்கள்.



( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.

 

 

 

 

 

 

 

 

1 comment:

  1. அருமை! நாம் பயன்படுத்தி வரும் பல சொற்கள் சமட்கிருத சொற்கள் என்பது வியப்பாக உள்ளது

    ReplyDelete