இதழ் - 84 இதழ் - ௮௪
நாள் : 03-12-2023 நாள் : ௦௩-௧௨-௨௦௨௩
உன் விளைநிலத்தை சீர்திருத்திப் பயிர்செய்து உண்.
பாடல் –81
தலம் தீர்த்தந் தானந் தவஞ்சேய்சந் தானம்
நலம்பெறலாற் றேவரெலா நாடி – நிலந்துதிப்பார்
மந்திரியே புன்னை வனநாதா வாதலினாற்
புந்தியினிற் பூமி விரும்பு.
உரை
குபேரன் போன்ற புன்னைவன நாதனே! தலம், தீர்த்தம், தானம், தவம், குழந்தைப்பேறு, தலைமுறைப்பேறு போன்ற நலங்கள் பூமிதனில் கிடைப்பதனால் வானுலகத்துத் தேவர்களும் நிலத்தைப் போற்றுவர் என்று நூல்கள் கூறுவதைக் காண்க. ஆதலினால் உன் புத்தியில் பூமியை மிக விரும்பு.
விளக்கம்
தலம் – இறைவாழிடம், தீர்த்தம் – புனித நீர், சேய் – குழந்தை, சந்தானம் – தலைமுறை வளர்ச்சி. தேவர் – வானுலகோர். நாடி நிலந்துதிப்போர் – பூமியை நாடிவந்து நலங்களைப் பெற்று போற்றுவர். மந்திரி – குபேரன். செல்வவளம் நிறைந்தவன் என்பதனால் புன்னைவன நாதனை மந்திரி என்றழைத்தார். புந்தி – புத்தி.
கதை
(ஔவையாரின் ஆத்திசூடியில் ’பூமி திருத்தியுண்’ என்றும், இராமபாரதியின் ஆத்திசூடி வெண்பாவில் ’பூமி விரும்பு’ என்றும் உள்ளது.)
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
நிலத்தினை என்றும் மதித்து வாழ வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment