பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 96

இதழ் - 96                                                                                               இதழ் - 
நாள் : 25-02-2024                                                                             நாள் : -0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)

 மெல்லினல்லாள் தோள்சேர் ”
 
உரை
       மெல்லிய இயல்புடைய உன் மனையாளின் தோள்களையே சேர்ந்து வாழ்.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 93

போதவே நற்குணங்கள் போந்துந் தனைமூத்த
மாதரின்பந் தீதே மனுநெறிபார் – ஆதலினால்
துய்யபுகழ்ப் புன்னைவனச் சோமா விளையளாஞ்
செய்யகுண மெல்லியாடோள் சேர்.

உரை
     புனிதமான புகழையுடைய புன்னைவனச் சோமனே! மனுநெறி தன்னினும் மூத்த பெண்ணுடன் இன்பந் துய்த்தலை தீது என்று ஒதுக்கிவைத்திருத்தலைப் பார். நற்குணங்கள் நிரம்பிய உனக்குரிய நற்குணங்கள் நிரம்பிய மெல்லியளாகிய மனையாளுடைய தோளையே சேர்ந்து வாழ்வாயாக.

விளக்கம்
    போதவே - நிரம்பவே. தன்னினும் மூத்த மகளிருடன் வாழ்வதை மனுநெறி தடைசெய்கிறது என்பதை “மூத்த மாதரின்பந் தீதே மனுநெறி பார்” என்றார். துய்ய – தூய்மை, புனிதம். செய்ய குணம் – நற்குணம். மெல்லியாள் – பெண், மனைவி

கருத்து
    மனையாளைத் தவிர பிற மாதரை விரும்பாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment