இதழ் - 102 இதழ் - ௧0௨
நாள் : 07-04-2024 நாள் : ௩௭-0௪-௨௦௨௪
பழமொழி – 102
” ஈனுமோ வாழை இருகால் குலை? ”
விளக்கம்
வாழையானது இரண்டு முறை குலை (வாழைத்தார்) ஈனாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர! 'ஈனுமோ
வாழை இருகால் குலை?'
ஒருவன் ஒரு முறை பிழை செய்த பின் அத்தவறைச் சரிசெய்து கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து இரண்டாவது முறையும் அதே தவறை மீண்டும் செய்தால், சான்றோர்களாயினும் அவர்களைப் பொருத்தருள மாட்டார்கள்.
இதனையே வாழை மரங்கள் எப்போதவது இரண்டு முறை குலை ஈனுமோ என்பதைத்தான் 'ஈனுமோ வாழை இருகால் குலை?' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
Superb
ReplyDelete