இதழ் - 124 இதழ் - ௧௨௪
நாள் : 08- 09 - 2024 நாள் : ௦அ - ௦௯ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 124
” உரைத்தால் உரைபெறுதல் உண்டு ”
விளக்கம்
ஒருவர் மற்றவரை இகழ்ந்து பேசுதல் கூடாது. பதிலுக்கு அவரும் நம்மை இகழ்ந்து பேசினால் நமக்குத் தலை குனிவு வரும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
” உரைத்தால் உரைபெறுதல் உண்டு ”
உண்மை விளக்கம்
பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.
பலரும் அமர்ந்திருக்கும் அவையில் ஒருவரை இகழ்ந்து பேசுதலைத் தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு பேசும் போது அவரும் நம்மை இகழ்ந்து பேசினால் நமக்குத் தலைகுனிவு ஏற்படும்.
அவையின் முன் சான்றோர்கள் மற்றவர்களின் மனம் வருந்தும்படி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் என்பதை 'உரைத்தால் உரைபெறுதல் உண்டு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete