பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 74                                                                                      இதழ் - 
நாள் : 24-09-2023                                                                       நாள் : -0௯-௨௦௨௩
 
 
 
 
வினைமுற்று விகுதிகள்
வகைகள்
  • தன்மை வினைமுற்று விகுதிகள்
  • தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள்
  • முன்னிலை வினைமுற்று விகுதிகள்
  • முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
  • குறிப்பு வினைமுற்று விகுதிகள்
 
தன்மை வினைமுற்று விகுதிகள்
  • தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம்.
  • கு, டு, து, று, என், ஏன், அல், அன் இவை தன்னை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.
சான்று
  • நடந்து - து
     
தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள்

  • ஆம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்.
சான்று
  • நடப்போம்     - ஓம்

முன்னிலை வினைமுற்று விகுதிகள்
  • ஐ, ஆய், இ முன்னிலை ஒருமை விகுதிகள் ஆகும்.
சான்று
  • நடந்தாய்    - ஆய்

முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்

  • மின், இர், ஈர் முன்னிலைப் பன்மை விகுதிகள் ஆகும்.
சான்று
  • நடமின்    - மின்

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
  • க, ய, ஈயர் வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.
சான்று
  • செல்க     -  க
  • செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி உம் என்பதாம்.

குறிப்பு வினைமுற்று விகுதிகள்
  • வினைமுற்று விகுதிகளில் அடுத்ததாக வருபவை குறிப்பு வினைமுற்று விகுதிகள் ஆகும்.
  • இவை குறிப்பாக காலங்காட்டுவன என்பதால் காலம் காட்டும் விகுதிகளைத் தவிர மற்ற விகுதிகளான அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏம், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் இன்னும் 22 விகுதிகளோடு  குறிப்பு வினைமுற்றுகள் வரும்.
 
     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

1 comment: