இதழ் - 123 இதழ் - ௧௨௩
நாள் : 01 - 09 - 2024 நாள் : ௦௧ - ௦௯ - ௨௦௨௪
பழமொழி – 123
” இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது ”
விளக்கம்
கண்ணின் மேல் உள்ள இமை செய்யும் குற்றம் கண்ணுக்குத் தெரியாது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
” இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது ”
உண்மை விளக்கம்
இங்கு இமை செய்யும் குற்றத்தைக் குறியீடாகக் காட்டிருப்பினும் நாம் செய்யக்கூடிய குற்றம் நம் மனசாட்சிக்கு உகந்து செய்வதில்லை. அவ்வாறு நம் மனம் சொல்வதைக் கேட்டிருந்தால் குற்றம் செய்யாமல் தவிர்த்திருப்போம். இதனால் குற்றங்களை பிறர் சொல்லி நாம் அறிந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்யும் குற்றங்கள் எதுவும் நம் மனசாட்சிக்குத் தெரிந்து செய்வதில்லை என்பதை உணர்த்தவே “இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDeleteNew information
ReplyDelete