பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 91                                                                                                 இதழ் - 
நாள் : 21-01-2024                                                                                 நாள் : -0-௨௦௨


பழமொழி – 91

” தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 
 
விளக்கம்
  தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது என்பது இப்பழமொழியின் விளக்கமாகும்.


உண்மை விளக்கம்
  இங்கு மகாபாரதக் கதையை நினைவில் கொள்ள வேண்டும். மகாபாரதத்தில் அர்ஜுனன் தன் வில் திறத்தால் வெற்றி கிடைத்தது என்று நினைத்துக்கொண்டிருந்தார்.

     போரில் கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்தில் இருந்து அர்ஜுனனை காப்பாற்ற கிருஷ்ணர் தேரின் சக்கரத்தை மண்ணில் பதித்தார். இதனால் அர்ஜுனனின் தலைக்கு வந்த கர்ணனின் பிரம்மாஸ்திரம் அர்ஜுனனின் தலைப்பாகையைப் பறித்துச் சென்றது.   

     ஒரு மனிதனுக்கு பெருந்துன்பம் வரும்போது தன் கர்மவினையால் அது சிறிய பாதிப்பை மட்டும் ஏற்படுத்திச் செல்வதைக் குறிக்கவே “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment