பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 123                                                                                     இதழ் - ௧
நாள் : 01 - 09 - 2024                                                                  நாள் :  -  - ௨௦௨௪



எழுவாய்த் தொடர்

  • எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர் ஆகும்.
சான்று
  • சுரதா கவிஞர்     -    பெயர்
  • வைகை பாய்ந்தது     -    வினை
  • பேருந்து வருமா?     -    வினா
   மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

சான்று

  • மல்லிகை மலர்ந்தது
     இதில் மல்லிகை என்னும் எழுவாயைத் தொடர்ந்து மலர்ந்தது என்னும் பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த் தொடர் ஆகும்.

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

2 comments: