இதழ் - 96 இதழ் - ௯௬
நாள் : 25-02-2024 நாள் : ௨௫-0௨-௨௦௨௪
பழமொழி – 94
” இன்னாது இருவர் உடனாடல் நாய் ”
விளக்கம்
வேட்டையாடுதல் என்பது சிறிய பொழுதளவே என்றாலும் ஒரு நாயைக் கொண்டு இருவர் வேட்டையாடினால், அது துன்பம் தருவதேயாகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'
ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு இரண்டு நபர்கள் வேட்டைக்குச் சென்றால் அவர்களின் வேட்டை நிறைவாகக் கிடைக்காமல் துன்பமே தரும்.
அதுபோல பெரியோர் அவையில், ஒருவர் சொன்ன கருத்தினை ஒரே சமயத்திலே ஒருவர் மறுத்துப் பேசலாமே தவிர பலரும் எழுந்து மறுத்துப் பேசுதல் அவைப் பண்பு ஆகாது. அது அந்த அவையினைரை அவமதிப்பது மட்டுமல்லாமல் பலருக்கும் துன்பம் தரும் செயல் ஆகும் என்பதை உணர்த்தவே 'இன்னாது இருவர் உடனாடல் நாய்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
Sir I need explanation
ReplyDelete