இதழ் - 117 இதழ் - ௧௧௭
நாள் : 21- 07 - 2024 நாள் : ௨௧ - 0௭ - ௨௦௨௪
பண்புத்தொகை
- ஒரு பெயர்ச்சொல்லின் நிறம், வடிவம், குணம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்துவது பண்புத்தொகை ஆகும்.
- மேலும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
உதாரணங்கள்
- வெண்ணிலவு, கருங்குவளை
சான்று
இந்தச் சொற்களில் வந்துள்ள வெண்மை, கருமை என்னும் பண்பு பெயர்கள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
Excellent madam
ReplyDelete