பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 107                                                                                            இதழ் - 0
நாள் : 12-05-2024                                                                             நாள் : -0ரு-௨௦௨


பழமொழி – 107
      “ கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறது ”

விளக்கம்
            ஒரு வீட்டில் இறப்பு நிகழும் போது பெண்கள் கூடி இருந்து அழும் போது அவர்கள் கைகள் ஆறுதலுக்குத் துழாவும் (தேடும்) என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.  


      “ கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறது ”

உண்மை விளக்கம்
        இங்கு துழாவுதல் என்றால் தேடுதல் என்று பொருள்.

    ஒரு வீட்டில் இறப்பு நிகழ்வு நேரிட்டால் பெண்கள் கூடி இருந்து அழுவது வழக்கம். அந்த துன்பநிலையிலும் சில பெண்கள் திருடுவதற்குத் தகுந்த நேரம் பார்த்துக் காத்திருப்பர்.

    அந்த சூழலில் பெண்கள் துன்பத்துடன் கூடி இருந்து அழும் போது தங்கள் கழுத்தில் உள்ள நகை மீது கவனம் செலுத்தமாட்டார்கள். இந்நிலையில் அப்பெண்களுடன் தானும் அழுவது போன்று நடித்து அவர்கள் (திருடர்கள்) கைகள் துழாவும் (தேடும்) என்பதை உணர்த்தவே “கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறது“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

2 comments:

  1. அண்ணா வணக்கம்.
    For this proverb could you give us the source from where we got.
    Like some bibliography which refers in the books.

    ReplyDelete
  2. வணக்கம் சுவாமிஜி மகராஜ், இதில் இந்த வாரம் வந்துள்ள பழமொழி பண்டைய மக்கள் வாய்வழி வந்த சொலவடை ஆகும். அடுத்த வாரம் பதிவிடும் பழமொழி - முன்றுரையரையனாா் எழுதிய பழமொழி நானூறு என்ற நூலில் இருந்து பதிவு செய்யப்படும். அதாவது ஒரு வாரம் பழந்தமிழா் பயன்படுத்திய சொலவடையும் மற்றொரு வாரம் பழமொழி நானூறு நூலில் உள்ள பழமொழியும் பதிவு செய்யப்படுகிறது. நன்றி

    ReplyDelete