இதழ் - 114 இதழ் - ௧௧௪
நாள் : 30 - 06 - 2024 நாள் : ௩0 - 0௬ - ௨௦௨௪
ஔவை (கி.பி -2)
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தினை, பகைவர்களும் அஞ்சும் வண்ணம் ஔவை பாடுகிறாள்.
களம்புகல் ஓம்புவின் தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே ( புறநானூறு - 87 )
அதியனை எதிர்க்கும் பகையாளிகளுக்கு இப்பாடல் அச்சுறுத்தலே. பகைவர்களே நீங்கள் போர்க்களத்துள் புகுவதைத் தவிர்த்து விடுங்கள். எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்து இருக்கின்றான். ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் உழைத்துச் செய்த வலிமைமிக்க தேர்ச்சக்கரம் போன்றவன் அவன் என்பதிலிருந்து அதியனின் வீரத்தை ஔவை எங்ஙனம் மதிப்பிடுகிறாள் என்று உணரலாம்.
அதாவது தேரினுடைய முதுகெலும்பாகத் திகழ்வது அதனுடைய சக்கரமே. அந்தச் சக்கரம் வலிமை உடையதாக இருந்தால்தான் தேர் தங்குதடையின்றி ஓட முடியும். அதுபோல கணக்கற்ற வலிமையும் திறமையும் பொருந்திய வீரரான அதியன் இருக்கும்வரை எங்களது படை தோற்காது என்று உவமையால் விளக்குகிறார்.
(வரும் கிழமையிலும் ஔவை வருவாள்…)
இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
ஔவை என அமையட்டும். ஓளவை என்று தவறாக உள்ளதே.
ReplyDelete