இதழ் - 119 இதழ் - ௧௧௯
நாள் : 04- 08 - 2024 நாள் : 0௪ - 0௮ - ௨௦௨௪
இராஜராஜன்
தில்லைச் சிற்றம்பலத்தின் ஒருசார் அடைபட்டு மறைந்திருந்த தேவாரத் திருப்பாசுரங்களைத் திருவருளாற்கண்டு வெளியிட்டு இராஜராஜன் சைவத்திற்குப் பெருநலம் புரிந்தான்.
உலகம் ஈடேறும் வண்ணம் எழுந்த தேவாரத்தை எடுத்து வெளியிட்ட வேந்தனை உய்யக் கொண்டான் என்று உயர்ந்தோர் பாராட்டினர்.
விருது பெயர்களால் அமைந்த ஊர்கள்
இராஜராஜன் விருதுப் பெயர்களை அவன் ஆட்சியில் அமைந்த மண்டலங்கள் தாங்கி நின்றன.
- ஈழ மண்டலம் (இலங்கை) மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயர் பெற்றது.
- தொண்டை மண்டலம் ஜயங்கொண்ட சோழ மண்டம் என ஆயிற்று.
- பாண்டி மண்டலம் இராஜராஜப் பாண்டி மண்டலம் எனப்பட்டது.
இனி, இவ்வரசன் பெயர் கொண்டு எழுந்த ஊர்களை முறையாகக் காண்போம்.
- திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜராஜன், அருண்மொழிவர்மன் என்று குறிக்கப்படுகின்றார்.
- அருண்மொழி என்பது அருமொழி என மருவி வழங்குவதாயிற்று.
- பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த கான நாட்டில் அருமொழித் தேவபுரம் என்னும் பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம் அறிவிக்கின்றது.
- இன்னும், தஞ்சை நாட்டிலும், தென்னார்க்காட்டிலும் அருமொழித் தேவன் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete