இதழ் - 96 இதழ் - ௯௬
நாள் : 25-02-2024 நாள் : ௨௫-0௨-௨௦௨௪
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
காசம் | ஈளை நோய் |
கும்பம் | குடம் |
சமஸ்கிருதம் | வடமொழி |
பிரசுரம் | வெளியீடு |
மாமிசம் | இறைச்சி |
- தற்காலத்தில் காச நோயைக் குணப்படுத்த முடியும்.
- தற்காலத்தில் ஈளை நோயைக் குணப்படுத்த முடியும்.
- கும்பத்தில் உள்ள நீர் வீடு முழுவதும் தெளிக்கப்பட்டது.
- குடத்தில் உள்ள நீர் வீடு முழுவதும் தெளிக்கப்பட்டது.
- நால் வேதங்கள் சமஸ்கிருத மொழியில் பாடப்படுகிறது.
- நால் வேதங்கள் வட மொழியில் பாடப்படுகிறது.
- நல்ல தரமான கட்டுரைகள் இந்த இதழில் பிரசுரமாகியுள்ளன.
- நல்ல தரமான கட்டுரைகள் இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
- சமணர்கள் மாமிச உணவை உண்ண மாட்டார்கள்.
- சமணர்கள் இறைச்சி உணவை உண்ண மாட்டார்கள்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
Wonderful sentence
ReplyDelete