இதழ் - 65 இதழ் - ௬௫
நாள் : 23-07-2023 நாள் : ௨௩-0௭-௨௦௨௩ 
தமிழ்ச்சொல் தெளிவோம்
|
தமிழ் சொற்கள் |
சீமந்தம் |
சூல்காப்பிடும் சடங்கு |
சீடன் | மாணாக்கன் |
சமயம் | பொழுது, நேரம், நெறி |
அநாதி | பழமை |
சிலேட்டுமம் | சளி, கோழை |
- அவளுக்குச் சீமந்தச் சடங்கு நடைபெறுகிறது.
- அவளுக்குச் சூல்காப்பிடும் சடங்கு நடைபெறுகிறது.
- சீடனின் உயர்வே ஆசானது மகிழ்ச்சியாகும்.
- மாணாக்கன் உயர்வே ஆசானது மகிழ்ச்சியாகும்.
- சிவபெருமானை வழிபடும் சமயம் சைவம் ஆகும்.
- சிவபெருமானை வழிபடும் நெறி சைவம் ஆகும்.
- தமிழரின் வாழ்வியல்முறை அநாதியானது.
- தமிழரின் வாழ்வியல்முறை பழமையானது.
- சிலேட்டுமத்திற்கு தமிழ் மருத்துவம் நற்பயன் அளிக்கும்.
- சளிக்கு தமிழ் மருத்துவம் நற்பயன் அளிக்கும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
பிற மொழிச் சொற்கள் எம் மொழிச் சொற்கள் என குறிப்பிட்டால் நன்று.
ReplyDelete