பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 121                                                                                           இதழ் - ௧
நாள் : 18- 08 - 2024                                                                        நாள் :  -  - ௨௦௨௪
 

பழமொழி – 121

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்கிறதா? 

விளக்கம்

பனை மரத்தில் உள்ள உதிரப்போகும் பழுத்த ஓலையைப் பார்த்து இளம் குருத்தோலை சிரிக்கிறது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.


உண்மை விளக்கம்

     ” பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்கிறதா? 

இங்கு பனை ஓலை சிரிப்பது போன்று குறிப்பிட்டிருந்தாலும் அனுபவம் வாய்ந்த சான்றோர்களின் நன்மொழி கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காத இளைஞர்கள் அவர்களை எள்ளி நகையாடுவது எவ்வகையிலும் இளையோருக்குப் பயன்தராது. அனுபவம் வாய்ந்தவர்களின் சொற்களைக் கேட்டு நடப்பவருக்கு எத்தகைய தீங்கும் வராது என்பதை குறிப்புணர்த்தவே “பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்கிறதா?“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: