இதழ் - 90 இதழ் - ௯0
நாள் : 14-01-2024 நாள் : ௧௪-0௧-௨௦௨௪
பழமொழி – 90
” இறைத்தோறும் ஊறும் கிணறு ”
விளக்கம்
ஒருவா் தன் கிணற்றில் தண்ணீா் இறைக்க இறைக்க அக்கிணற்றில் தண்ணீா் ஊறும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.
ஒருவன் தன்னிடத்திலுள்ள செல்வங்களை இல்லாதோருக்கு ஈதல் செய்ய வேண்டும். தன்னிடத்தில் வந்து யாசித்தவர்களுக்கு இல்லையென்று கூறாமல் கொடையளிக்க வேண்டும். அவ்வாறு கொடையளித்தவர்களின் செல்வம் என்றென்றும் குறையாது. அது இறைத்த கிணறு எவ்வாறு ஊறுமோ அதைப்போன்று அத்தகைய செல்வந்தர்களின் செல்வமும் குறையாது நிறையும் என்பதை உணர்த்தவே 'இறைத்தோறும் ஊறும் கிணறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete