பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 120                                                                                     இதழ் - ௧
நாள் : 10- 08 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪


பழமொழி – 120

” உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு 

விளக்கம்

ஆற்றல் இல்லாதவர்கள் அவமானமே அடைவார்கள் என்பதை ஒருவன் ஆற்றிற்குச் சென்று குளிக்க நினைத்து வண்டிக்குப் பயன்படுத்தும் எண்ணெயைப் பூசிக்கொண்டது போல் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


உண்மை விளக்கம்
தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய்! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.

ஒருவன், தன்னைப் பெரியோனாக ஆக்கிக்கொள்ள வேண்டுமானால் ஆற்றலும் திறமையும் உள்ளோருடன் இணைந்து செயல்படவேண்டும். அதை விடுத்து, ஆற்றலும் திறமையும் இல்லாதவரோடு இணைந்து செயல்பட்டால் ஆற்றிற்குச் சென்று குளிக்க நினைத்து வண்டிக்குப் பயன்படுத்தும் எண்ணெயில் குளிப்பது போன்ற செயல் ஆகும். இச்செயலால் அவர்களுக்கு அவமானம் ஏற்படுமே தவிர புகழ் வராது என்பதை விளக்கவே 'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020 

1 comment: