பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 92                                                                                                                    இதழ் - 
நாள் : 28-01-2024                                                                                                     நாள் : -0-௨௦௨

  
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழில் வழங்கப்படும்

பிறமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


ஆகாஷ்வாணிவானொலி
பகவான்கடவுள்
ஃபைல்கோப்பு
சாக்ஸ்காலுறை
அதீதம்மிகை
 
  
  • ஆகாஷ்வாணியின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது.
  • வானொலியின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது.

  • பகவான் உள்ளாரா?
  • கடவுள் உள்ளாரா?

  • அந்த ஃபைலை எடுங்கள்.
  • அந்தக் கோப்பை எடுங்கள்.

  • தற்போது புதுவிதமான சாக்ஸ்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன.
  • தற்போது புதுவிதமான காலுறைகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

  • குற்றாலக் குறவஞ்சியில் அதீத உவமைப் பாடல்கள் காணப்படுகின்றன.
  • .குற்றாலக் குறவஞ்சியில் மிகைப்படுத்தப்பட்ட உவமைப் பாடல்கள் காணப்படுகின்றன

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: