இதழ் - 89 இதழ் - ௮௯
நாள் : 07-01-2024 நாள் : 0௭-0௧-௨௦௨௪
பழமொழி – 89
” குரங்குப்புண் ஆறாது ”
விளக்கம்
குரங்கிற்கு புண் ஏற்பட்டால் அது எளிதில் ஆறாது. ஏனென்றால் அக்குரங்கு அப்புண்ணைக் கிளைந்து மேலும் புண்ணாக்கும். ஆகையால் அக்குரங்குப்புண் ஆறாது என்பது இப்பழமொழியின் விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
” குரங்குப்புண் ஆறாது ”
இங்கு குரங்கின் புண்ணைக் குறிப்பாகச் சொன்னாலும் இப்பழமொழி மனிதர்களுக்காகவே சொல்லப்பட்டது. மனிதர்கள் தம் சிறு வயதில் ஏதேனும் தீய குணங்கள் மனதில் நின்றுவிட்டால் அது என்றென்றும் மாறாமல் நினைவில் நிற்கும்.
அத்தகையோர் பெரியவர்கள் ஆகிவிட்டாலும் அத்தீயகுணங்கள் நீங்காமல் மனதில் நின்று ஆறாத வடுவாக இருக்கும். அத்தீயகுணத்தால் அவர் பல தவறுகளைச் செய்ய நேரிடும் என்பதை குறிக்கவே “குரங்குப்புண் ஆறாது“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete