பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 90                                                                                                       இதழ் - 0
நாள் : 14-01-2024                                                                                         நாள் : -0-௨௦௨

 
 
குற்றியலுகரம்

குற்றியலுகரம் - வகைகள்

இயல்பீறு, விதியீறு - புணர்ச்சி   
  • இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன் க, ச, த, ப என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்.
சான்று
  • குரங்கு  +  பெரிது  =   குரங்கு பெரிது
  • தெள்கு +  சிறிது   =   தெள்கு சிறிது
  • நாகு    +  கடிது   =   நாகு கடிது

விதியினும்
  • விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும் சொல்லின் வடிவம்

சான்று
  • நிலம் + தலைவர்       (நிலைமொழி ஈற்று மெய் “ம்” கெடல்)
  • நில + தலைவர் =  நிலத்தலைவர்      (விதியீறு) 
  • கானம்  +    பறவை       (நிலைமொழி ஈற்று மெய் “ம்” கெடல்)
  • கான    +  பறவை கானப்பறவை     (விதியீறு) 
    இதில் நிலைமொழி இறுதி மகர ஒற்றாகும். அது வருமொழியோடு புணரும் பொழுது “மவ்வீ றொற்றழிந்து” என்னும் விதியினால் மகரமெய் அழிந்து, நில + தலைவர், கான + பறவை என்பதில் நிலைமொழி உயிரீறாக மாறுகின்றது. இதுபோல் இயல்பாகவும், விதியினாலும், உயிரீறாக நிற்கும் சொல்முன் க, ச, த, ப எழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்து புணரின் அவ்வல்லெழுத்து மிக்குப் புணரும்.

         “ இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
            க ச த ப மிகும்; விதவாதன மன்னே. ”
                                          - நன்னூல், நூற்பா. எண். 165

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment