பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 119                                                                                              இதழ் - ௧௧
நாள் : 04- 08 - 2024                                                                         நாள் : 0 - 0 - ௨௦௨௪


பழமொழி – 119

” வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் அளவு 
இடங்கொடுத்தார்கள் அவன்,
அதை அறுத்து ஊர் முழுதும் அடித்து
இது எனது என்றான் 

விளக்கம்

ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆட்டுத்தோல் அளவுதான் இடம் கொடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் அந்த ஆட்டுத்தோலை அறுத்து ஊர்முழுக்க அடித்து, இந்தத் தோல் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடம் எங்களுக்குச் சொந்தம் என்றான் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.


உண்மை விளக்கம்

ஆங்கிலேயன் எவ்வாறு நாம் கொடுத்த சிறிய இடத்தை வைத்துக்காண்டு நாடு முழுமையையும் ஆக்கிரமித்து ஆட்சி செலுத்தினானோ அதுபோலவே, சிலர் நாம் கொடுக்கும் உரிமையைத் தவறாகப் புரிந்து கொண்டு நம் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துவர். அத்தகையோரை இனம் கண்டுகொள்ளவே நம் முன்னோர்கள் “வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் அளவு இடங்கொடுத்தார்கள் அவன், அதை அறுத்து ஊர் முழுதும் அடித்து இது எனது என்றான்“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: