இதழ் - 67 இதழ் - ௬௭
நாள் : 06-08-2023 நாள் : 0௬-0அ-௨௦௨௩
வெளி
வெளி என்னும் சொல் திறந்த நிலப்பரப்பைக் குறிப்பதாகும். பரந்த இடத்தில் குடியிருப்புகளை அமைத்து வெளி என்ற சொல்லை இணைத்து ஊர்ப்பெயர்களை வழங்கி வந்துள்ளனர். நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு. சங்க காலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது.
எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ்விருவரும் முறையே எருமைவெளியிலும், வீரைவெளியிலும் பிறந்தவரென்பது வெளிப்படை. சித்தர்களில் கடுவெளிச் சித்தர் என்றுளார். அவருடைய பெயரும் தம் ஊரிப்பெயரிலிருந்தே வழங்கி வந்துள்ளமையை அறிய முடிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
மிக அருமையான சிந்தனை. வீரைச் செடிகள் வளர்ந்துள்ள, இடங்கள், மற்றும் எருமைகள் மேயும் புல் வெளிகளும் மக்கள் வாழும் பகுதிகளாக மாறி அப்பெயரே ஊர்களாகி உள்ளன என நினைக்கிறேன்.
ReplyDelete