பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 91                                                                                                 இதழ் - 
நாள் : 21-01-2024                                                                                 நாள் : -0-௨௦௨

  
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழில் வழங்கப்படும்

பிறமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


தரப்புபக்கம்
மசூதிபள்ளிவாயில்
மத்தாப்பூதீப்பூ
லத்திகுறுந்தடி
ஆராதனைவழிபாடு
 
  
  • எனது தரப்பு நியாயத்தைக் கேளுங்கள்.
  • எனது பக்க நியாயத்தைக் கேளுங்கள்.

  • ஒவ்வொரு நாளும் மசூதியில் ஐந்து நேரத் தொழுகை நடைபெறும்.
  • ஒவ்வொரு நாளும் பள்ளிவாயிலில் ஐந்து நேரத் தொழுகை நடைபெறும்.

  • கார்த்திகை விளக்கீடு என்றாலே மத்தாப்பூ ஞாபகம் வந்துவிடும்.
  • கார்த்திகை விளக்கீடு என்றாலே தீப்பூ ஞாபகம் வந்துவிடும்.

  • காவல்துறையினர் தம் கையில் லத்தி வைத்திருப்பர்.
  • காவல்துறையினர் தம் கையில் குறுந்தடி வைத்திருப்பர்.

  • ஆராதனைக் கூட்டம் நடைபெறுகிறது.
  • வழிபாட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: