இதழ் - 103 இதழ் - ௧0௩
நாள் : 14-04-2024 நாள் : ௧௪-0௪-௨௦௨௪
பழமொழி – 103
” அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் ”
விளக்கம்
ஒருவன் நிலத்தை பயிரட செய்வதற்கு முன் அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால்
பயிர் செழிக்கும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
” அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் ”
உண்மை விளக்கம்
மேற்கண்ட பழமொழியில், நிலத்தை அகலமாக உழுவதைவிட
ஆழமாக உழுதல் வேண்டும் என்று நிலத்திற்குப் பாங்காகச் சொன்னாலும் ஒருவன் தான் செய்கின்ற
செயலில் அகன்று விரிந்து தேடுவதை விட அச்செயலை ஆழமாக வேருன்றிச் செய்தால் அச்செயல்
சிறப்பாக அமையும் என்பதை விளக்கவே “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்“ என்ற
இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
Excellent
ReplyDelete