இதழ் - 96 இதழ் - ௯௬
நாள் : 25-02-2024 நாள் : ௨௫-0௨-௨௦௨௪
பாண்டிய நாட்டு ஊர்ப்பெயர்கள்
அழகிய பாண்டியன்
பாண்டிய மன்னர் பரம்பரையில் பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டிய மன்னர்களுள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய அழகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப்பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பொருட்டு அம்மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டதால் அவ்வூர் அழகிய பாண்டியபுரம் என்று வழங்கப்பெற்று வருகிறது.
சேந்தன்
ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் பாண்டிய மன்னன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது 'சிலைத் தடக்கைச் செழியன்' என்றும், 'செங்கோல் வேந்தன்' என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுவதன் மூலம் அறியப்படும். இன்றும் சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு. ஆகவே பாண்டிய அரசர் பெயர்களிலும் ஊர்கள் வழங்கி வருவதைக் காணமுடிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
Wonderful
ReplyDelete