இதழ் - 161 இதழ் - ௧௬௧
நாள் : 15 - 06 - 2025 நாள் : ௧௫ - ௦௬ - ௨௦௨௫
"ஈவது நன்றுதீ தீயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ டோவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தலைநிற்கும் ஊர்ந்து"
என்கிறார் காரியாசான்.
இப்பாடல் மூலம் பிறருக்கு வேண்டியவற்றை கொடுப்பது நன்று. எவருக்கும் கொடுக்காமல் இருப்பது தீமையான செயலாகும் என்றும், நல்லவர்கள் எல்லோருடனும் சேர்ந்து இருப்பது நன்று. அதேபோல் நன்னெறிக்கு உரிய நல்லனவற்றைக் கேட்டு அதற்கு ஏற்றது போல் ஒழுகுதல் மிகநன்று என்றும் வலியுறுத்துகிறார். இவ்வாறு இந்த ஒழுக்கம் மேன்மேலும் உயர்ந்த நல்வழிக்கு மக்களைக் கொண்டு போய் சேர்க்கும் என்கிறார்.
இலகு தமிழில் சிறுபஞ்சமூலம் முழுவதுமே அறக் கருத்துக்கள் காணப்படுகின்றன. எல்லோரும் இக்கருத்துக்களைப் பின்பற்றுவோமேயானால் நிச்சயம் நல்லதொரு மனித சமுதாயத்தைக் காணலாம். கவனித்துக் கொள்ளுங்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் .
வரும் கிழமை வேறொரு தமிழ் புலவருடன் சந்திக்கலாம்…
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
அருமையான விளக்கம்
ReplyDelete